/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் குருபூஜை: உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த உத்தரவு
/
தேவர் குருபூஜை: உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த உத்தரவு
தேவர் குருபூஜை: உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த உத்தரவு
தேவர் குருபூஜை: உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த உத்தரவு
ADDED : அக் 23, 2025 11:20 PM

கமுதி: கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன்னில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
அப்போது முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கான ரோடு வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்துமிடங்கள், மருத்துவ சேவை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டார். இதில் பசும்பொன் பகுதியை மையமாக வைத்து நான்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ரோடுகளை சீரமைக்கவும், போதுமான அளவு தடுப்புவேலிகள் அமைக்க வேண்டும்.
வாகனம் நிறுத்துமிடம் நினைவிடத்திற்கு செல்லும் வழி ஆகிய இடங்களில் போதுமான அளவு மின்விளக்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்திட வேண்டும் என்றார்.
உடன் எஸ்.பி.,சந்தீஷ், ஆர்.டி.ஓ.,சரவணபெருமாள், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், லெட்சுமி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

