/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது
/
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்; 6056 மாணவருக்கு வழங்கப்பட்டது
ADDED : ஜன 02, 2025 11:21 PM

திருவாடானை; அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு 6056 மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு டிச.23ல் நிறைவு பெற்று 24 முதல் ஜன.1 வரை ஒன்பது
நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வட்டார கல்வி அலுவலரிடமிருந்த மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வட்டார அளவில் இவற்றை பிரிக்கும் பணி முடிந்து தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.
நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு இப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை வட்டாரத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப்பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 112 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் படிக்கும் 6056 மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது என்றனர்.