ADDED : நவ 12, 2025 09:53 PM
ராமநாதபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டிச.,5ல் நடைபெறவுள்ள திருக்குறள் முற்றோதல் போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2025--26 ஆம் ஆண்டிற்கான குறள் பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை நவ.,14க்குள் https://tamilvalarchithurai.org/tkm என்ற இணையவழியிலும், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அல்லது tamilvalarchiramnad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சி டிச.,5ல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

