/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் திருப்பனந்தாள் ஆதினம்
/
திருவாடானையில் திருப்பனந்தாள் ஆதினம்
ADDED : டிச 29, 2025 07:03 AM

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு திருப்பனந்தாள் ஆதினம் சபாபதி தம்புரான் வருகை புரிந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தின் ஆதினம் ஸ்ரீமத் சபாபதி தம்புரான், நேற்று காலை மார்கழி யாத்திரையாக திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவாச்சாரியார்கள் சந்திரசேகர், ரவி குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சன்னதியில் நடந்த தீபாரதனையில் பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
முன்னதாக ஆவடையார்கோயில், திருப்புன வாசல் கோயிலுக்கு சென்ற அவர் திருவாடானை கோயிலில் தரிசனம் செய்து விட்டு ராமேஸ் வரம் புறப்பட்டு சென்றார்.

