/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிர்களில் நோய் தாக்குதல் திருவாடானை விவசாயிகள் கவலை
/
நெற்பயிர்களில் நோய் தாக்குதல் திருவாடானை விவசாயிகள் கவலை
நெற்பயிர்களில் நோய் தாக்குதல் திருவாடானை விவசாயிகள் கவலை
நெற்பயிர்களில் நோய் தாக்குதல் திருவாடானை விவசாயிகள் கவலை
ADDED : டிச 28, 2024 07:50 AM
திருவாடானை : திருவாடானை பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாடானை அருகே செக்காந்திடல், காடாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ந்து உள்ள நெற்பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. குளிர் காற்று வீசுவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகமாக காணபடுகிறது. பூச்சிகள் கூட்டமாக சேர்ந்து பச்சை பகுதியை உறிஞ்சிவிடுவதால் தண்டுபகுதி முழுவதும் கருப்பாக மாறி பலம் இழந்து நெல் பயிர்கள் கீழே சாய்ந்து விடுகிறது.
செக்காந்திடல் விவசாயிகள் கூறுகையில், நெற்பயிருக்கு கிடைக்க வேண்டிய நுண்ணுாட்ட சத்து கிடைக்காமல் நெல் மணிகள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக மழையால் பயிர்கள் நிலங்களில் சாய்ந்துள்ளது.
தற்போது நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளது என்றனர்.