/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூட்டு
/
திருவாடானை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூட்டு
ADDED : மார் 18, 2024 06:35 AM
திருவாடானை : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டபட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கபட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது.
இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது- ராமநாதபுரம் லோக்சபா திருவாடானை சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு அரசு வாகனம் திரும்ப பெறபட்டது.
பொது இடங்களில் வைக்கபட்ட கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சி பேனர்கள் அகற்ற அறிவுறுத்தபட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசியல் தலைவர்கள் படங்களை மறைக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
பறக்கும் படையினர் நேற்று முன்தினம் முதல் கண்காணிப்பு பணியை துவக்கியுள்ளனர்.
திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

