/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதி நிலவரம் : தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
/
திருவாடானை தொகுதி நிலவரம் : தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
திருவாடானை தொகுதி நிலவரம் : தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
திருவாடானை தொகுதி நிலவரம் : தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
ADDED : நவ 10, 2025 12:33 AM
திருவாடானை: சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து திருவாடானை தொகுதி தி.மு.க., நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். திருவாடானை சட்டசபை தொகுதி நிர்வாகிகளை நவ.6 ல் சந்தித்தார்.
இது குறித்து தி.மு.க., கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது- சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற நிகழ்வில் இச்சந்திப்பு நடந்தது. ஒவ்வொருவரையும் தனிதனியே அருகில் அமர வைத்து பேசினார். தொகுதி நிலவரம், தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளபட்டு வருகிறது.
ராமநாதபுரம் எம்.பி. தேர்தலில் திருவாடானை சட்டசபை தொகுதியில் பெற்ற ஓட்டுகள் நிலவரம் குறித்து கேட்டார்.
போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு சம்பந்தமாக கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுகிறீர்களா என்றும் கேட்டார். 10 நிமிடங்கள் மிகவும் எளிமையாக பேசினார். வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிலவரங்களை கேட்டார். இங்குள்ள ஒவ்வொரு நிர்வாகிகளின் செயல்பாடுகள் விபரம் முதல்வரிடம் உள்ளது. அருகில் அமர செய்து முதல்வர் பேசியது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. இத் தொகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டோம் என்றனர்.

