/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் திருவாடானை அரசு மருத்துவமனை
/
இருளில் திருவாடானை அரசு மருத்துவமனை
ADDED : ஏப் 08, 2025 05:42 AM

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.
திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனை நுழைவு வாயில், வளாகத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
நோயாளிகளுடன் வருபவர்கள் மருத்துவமனை முன்புள்ள கட்டடத்தில் தங்குகின்றனர். ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் மருத்துவமனைக்குள் செல்பவர்கள் நடந்து செல்கின்றனர்.
இருளாக இருப்பதால் நோயாளிகள் அச்சமடைகின்றனர். எரியாத விளக்குகளை எரியச் செய்ய சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

