/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றம்
/
திருவாடானை கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றம்
திருவாடானை கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றம்
திருவாடானை கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றம்
ADDED : மே 22, 2025 11:50 PM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவாடானையில் சிநேகவல்லி உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.
ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மே 31 காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 8ல் தேரோட்டம் நடைபெறும். பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர் அமர்ந்த தேரும், சிநேகவல்லி அம்மன் அமர்ந்த மற்றொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.
மறுநாள் தீர்த்தவாரியும், விசாகத்தை முன்னிட்டு அன்றைய தினம் கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறும்.
ஜூன் 10ல் சண்டிகேஸ்வரர் சுவாமி வீதி உலாவும், மறுநாள் உற்ஸவசாந்தி நடைபெறும்.
விழா நாட்களில் பூதம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திரவிமானம், குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன், 22 கிராம நாட்டார்கள் மற்றும்திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.