/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயிலில் அடிப்படை வசதிகள் தேவை சட்டசபையில் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : பிப் 15, 2024 05:04 AM

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள், தேவிபட்டினம் நவபாஷணம் கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசியதை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யபட்டதாக திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் கூறினார்.
அவர் கூறியதாவது:
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது.
வெளி மாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் திருவிழா நாட்களில் கூடுகின்றனர்.
அக்.,ல் கோயிலுக்கு தேவையான கழிப்பறைகள், தங்கும் விடுதிகள், குடிநீர் வசதிகள் போன்ற பல அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
அதே போல் தேவிபட்டினம் நவபாஷண நவக்கிரக கோயிலில் படித்துறை மதகு, தங்கும் விடுதிகளை கட்டி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையில் பேசினேன்.
அப்போது திருவெற்றி யூரில் ரூ.45 லட்சத்தில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும், தேவிபட்டினம் நவபாஷணத்தில் நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடபட்டு பணிகள் துவங்கும் என பதில் அளிக்கப்பட்டது என்றார்.