/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
/
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
ADDED : பிப் 21, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார்--கீழச்சாக்குளம் சாலையில் முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கடம்பன்குளம் ஊருணி அருகே நின்று கொண்டிருந்த முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் செந்துார் பாண்டி மகன் முகேஷ்குமார் 24, வேலு மகன் தனுஷ்கோடி 27, அஞ்சதம்பல் வழிவிட்டான் மகன் பரமசிவம் 25, ஆகிய 3 பேரை சோதனை செய்தனர்.
அப்போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு வாள் வைத்திருந்தது தெரிய வந்தது. எஸ்.ஐ.,சரவணன் வழக்குபதிந்து முகேஷ்குமார், தனுஷ்கோடி, பரமசிவம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.