ADDED : ஆக 27, 2025 12:32 AM
ராமநாதபுரம்; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் துளிர் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் போகலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் 6 முதல் 8 ம் வகுப்பு பிரிவில் முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், பொட்டிதட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்.
ஒன்பது, பத்தாம் வகுப்பு பிரிவில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், காமன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 பிரிவில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம், காமன் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போகலுார் வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, சத்திரக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா பரிசுகளை வழங்கினர். இதில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள் செப்.,1ல் மாவட்ட அளவில் நடக்கும் வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் விஜயா, போகலுார் வட்டார செயலாளர் குமரேசன் பங்கேற்றனர்.