/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்கள் நுழைந்தாலே வசூல்: ஆட்டோ டிரைவர்கள், டூவீலர் ஓட்டிகள் எரிச்சல்

ADDED : நவ 04, 2025 10:13 PM
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் வாகனங்கள் நுழைந்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ஆட்டோ டிரைவர்கள், டூவீலர் ஓட்டிகள் எரிச்சல் அடைகின்றனர்.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு, அனைத்து வகையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பிரம்மாண்டமான நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டு டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பாதுகாப்பாக சென்று வரும் நிலையில் மேல் மற்றும் கீழ் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் உட்பட அவர்களுடன் செல்லும் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டேஷன் உள் பகுதியில் டூவீலர் மற்றும் கார் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் உள்ளே நுழைந்தாலும் உடனடியாக 10 ரூபாய் கட்டணம் அடாவடியாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆட்டோவில் செல்லும் பயணிகளிடம் கூடுதல் தொகை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் டூவீலரில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை இறக்கிவிட்டு செல்லும் சூழலில் கட்டணம் வசூலிப்பதால் எரிச்சல் அடையும் நிலை உள்ளது. ஆகவே ரயில்வே நிர்வாகம் எந்த வகையான வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என முறைப்படுத்துவதுடன், அதற்கான கட்டண விபரங்களையும் பயணிகள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.