/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி: பயமுறுத்தும் டூவீலர் சைலன்சர்களால் திக்.. திக்... அட்ராசிட்டியில் இளைஞர்கள்

ADDED : நவ 04, 2025 10:13 PM
பரமக்குடி: பரமக்குடியில் இளைஞர்கள் டூவீலர்களில் சைலன்சர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் சென்று அட்ராசிட்டியில் ஈடுபடுவதால் ரோடுகளில் செல்வோர் திக்.. திக் பயணம் செய்கின்றனர்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மற்றும் அதற்கு மேலும் டூவீலர்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் இளைஞர்கள் 18 வயதுக்கு கீழ் மற்றும் லைசன்ஸ் வாங்காமலும் டூவீலர்களை இயக்கும் செயல் அதிகரித்துள்ளது.
இத்துடன் இளைஞர்கள் பலரும் டூவீலர்களில் சைலன்சர்களை மாற்றி அமைத்து செல்லும் நிலை உள்ளது. இது போன்றவர்கள் அதிகமான கூட்டம் உள்ள பகுதிகள் மற்றும் அமைதியான தெருக்களில் திடீரென அதிக ஒலியுடன் செல்லும் போது ரோட்டில் செல்வோர் மற்றும் வீடுகளில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பதற்றம் அடையும்படி இருக்கிறது.
இதே போல் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இவர்கள் செல்லும் போது பதற்றம் அடைகின்றனர். முக்கியமாக பள்ளி மற்றும் கல்லுாரி விடும் நேரங்களில் இளைஞர்கள் அதிவேகமாக டூவீலர்களை இயக்கி அட்ராசிட்டியில் ஈடுபடும் நிலை அதிகரித்துள்ளது.
ஆகவே அதி வேகமாக மற்றும் சைலன்ஸர்களை மாற்றியமைக்கும் டூவீலர்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.