sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

/

சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 04, 2025 11:29 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டு தோறும் செப்., 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதில் சுற்றுலாத் துறையில் நடைபெறும் சாதனைகள், தலைமைத்துவம் மற்றும் புதுமைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, துாய்மையான சுற்றுலாத்தளம், சிறந்த மாவட்டத்திற்கான சுற்றுலா மேம்பாட்டு விருது உள்ளிட்ட 17 பிரிவுகளில் 45 விருதுகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுலாத்துறையின் நிபுணர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு விண்ணப்பங்களை மதிப்பிடும்.

மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்கள் சுற்றுலாத்துறை குறிப்பிடும் இடத்தில் நேரில் தங்கள் விருதுகளைப் பெற்றுக் கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளும் துாய்மையான சுற்றுலாத் தலத்திற்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். செப்.,15க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலரை 0457-3-221 371, 91769 95871 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us