/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாதனையை நோக்கி.. ராமநாதபுரம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது
/
சாதனையை நோக்கி.. ராமநாதபுரம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது
சாதனையை நோக்கி.. ராமநாதபுரம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது
சாதனையை நோக்கி.. ராமநாதபுரம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது
ADDED : ஜூன் 20, 2025 11:39 PM

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்வி பெறாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் 'புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை' அனைத்து மாவட்டங்களிலும் 2019 முதல் பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் முன்னேற விளையும் மாவட்டம் பட்டியலில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
2019ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட படிப்பறிவில்லாத 67,968 பேருக்கு அடிப்படைக் கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் தன்னார்வலர்கள் மூலம் எழுத படிக்க சொல்லிக் கொடுத்து ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக எழுத, படிக்கத் தெரியாதவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தது.   இரு ஆண்டுகளுக்கு முன்பு 5400 பேராக இருந்த கல்வி அறிவு இல்லாதோர் சென்றாண்டு 4500 பேராகவும்,  இந்தாண்டில் 230 பேராகவும் குறைந்துள்ளனர்.
இவர்களுக்கும் எழுதப்படிக்க பயிற்சி அளித்து ஜூன் 15ல் தேர்வு எழுதியுள்ளனர். அனைவரும் தேர்ச்சி பெற்றால் விரைவில் தமிழகத்தில் நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ராமநாதபுரம்  சாதனை படைக்க  உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம்  ஆகியவை ஏற்கனவே  நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்றவையாக உள்ளன.
மீதி உள்ள 9 ஒன்றியங்களில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயின்ற 230 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இத்தேர்வு மதிப்பீடு செய்யப்பட்டு  முடிவுகள் ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது என்றார்.

