ADDED : மே 20, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரண்மனை முன்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜன், தொ.மு.ச., மாவட்ட செயலாளர் மலைக் கண்ணு, சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம் தொ.மு.ச., மாவட்டத்தலைவர் காஞ்சி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத்தலைவர் ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் தேசிய குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். நான்கு தொழிலாளர்கள் சட்டத்தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும், வங்கி, காப்பீடு நிறுவனம், தொலைதொடர்பு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.