/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டங்களால் பாதிப்பு; வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிப்பு
/
பரமக்குடி காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டங்களால் பாதிப்பு; வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிப்பு
பரமக்குடி காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டங்களால் பாதிப்பு; வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிப்பு
பரமக்குடி காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டங்களால் பாதிப்பு; வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிப்பு
ADDED : ஜூலை 12, 2025 04:30 AM
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி காந்தி சிலை முன்பு அனைத்து பொதுக்கூட்டங்களும் நடத்தப்படும் நிலையில் நெரிசலால் வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணி மற்றும் வியாபார நிமித்தமாக வந்து செல்கின்றனர். தொடர்ந்து பரமக்குடி நகர் பெரிய வணிக நகரமாக விளங்குகிறது.
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வருவோர் நெடுஞ்சாலையை கடந்து கீழப்பள்ளி வாசல் தெரு, ஆர்ச் வழியாக காந்தி சிலை பகுதியில் இருந்து நகருக்குள் செல்லும் பிரதான வழியாக உள்ளது.
தற்போது காந்தி சிலை ரோடு ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய வணிக ஸ்தலமாக உள்ளது. மேலும் இந்த ரோடு வழியாக பெரிய கடை பஜார், காய்கறி மார்க்கெட் வீதி என செல்ல வேண்டி உள்ளது.
இதேபோல் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் இந்த வழியை மட்டும் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் எந்த பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் காந்தி சிலை முன்பு மட்டுமே அதிகளவில் நடத்தும் நிலை உள்ளது.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் உட்பட அப்பகுதியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் லாரி மற்றும் டூவீலர், சைக்கிளில் செல்வோர், மாணவர்கள், பாதசாரிகள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து ஸ்பீக்கர்களை அலற விடுவதால் அனைத்து தரப்பினரும் முகம் சுளிக்கும் படி உள்ளது.
எனவே பொதுக்கூட்டம் நடத்துமிடத்தை மாற்ற நகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

