/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வியாபாரிகள் முகாம் *அறுவடை செய்யப்படும் நெல் வயல்களில்.. *திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் மும்முரம்

ADDED : பிப் 14, 2024 05:49 AM

ஆர்.எஸ்.மங்கலம், : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல் வயல்களில் முகாமிட்டுள்ள வியாபாரிகள் அறுவடை செய்தவுடன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக நெல் அறுவடைப் பணிகள் நடக்கிறது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் விவசாயத்தில் அதிக மகசூல் கிடைத்துள்ளதால் நெல் விலையும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
அரசு சார்பில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களை விட தனியார் வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து நெற்களை கொள்முதல் செய்வதால் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெற்களை கொள்முதல் செய்வதில் தனியார் வியாபாரிகள் இடையே போட்டிகள் ஏற்பட்டுள்ளதால் கிராமங்கள் தோறும் அறுவடை செய்யப்படும் வயல்களுக்கே சென்று அறுவடை செய்ததும் வயல்களில் நெற்களை கொட்டி சாக்குகளில் மொத்தமாக கட்டி, எடையிட்டு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
அறுவடை செய்யப்படும் வயல்களில் வியாபாரிகள் நெற்களை கொள்முதல் செய்து வருவதாலும் உடனடியாக விற்பனை செய்த நெல் மூடைகளுக்கு பணத்தையும் வழங்கி வருவதாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
---