/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் கழிவுநீர், குப்பையால் வியாபாரிகள் அவதி
/
வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் கழிவுநீர், குப்பையால் வியாபாரிகள் அவதி
வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் கழிவுநீர், குப்பையால் வியாபாரிகள் அவதி
வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் கழிவுநீர், குப்பையால் வியாபாரிகள் அவதி
ADDED : ஜூலை 28, 2025 05:26 AM

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோட்டில் உள்ள வாரச்சந்தை வளாகம் பராமரிப்பின்றி குப்பை, கழிவுநீர் துர்நாற்றத்தால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் அம்மா பூங்கா அருகேயுள்ள காலி இடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை செயல்படுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர்.
அவர்களிடம் தலா ரூ.100 வரை ஊராட்சி நிர்வாகத்தினர் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் சந்தை நடைபெறும் பகுதியில் குப்பை கொட்டி குவித்து புதன்கிழமை மட்டும் தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாமல் குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் காலை முதல் இரவு வரை காய்கறி, பழங்கள், பொருட்களை விற்கும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வளாகத்திற்குள் போதிய இடமின்றி ரோட்டோரத்தில் சிலர் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்டணம் வசூலிக்கும் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.