/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி வாரச்சந்தையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
/
கடலாடி வாரச்சந்தையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
கடலாடி வாரச்சந்தையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
கடலாடி வாரச்சந்தையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் போலீசார் நடவடிக்கை தேவை
ADDED : ஆக 09, 2025 03:11 AM
கடலாடி: கடலாடி வாரச்சந்தை பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலாடி நகர் பகுதியில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி உள்ள பகுதியில் வாரச்சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது. இந்நிலையில் கடலாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் 80 சந்தை வியாபாரிகளுக்கான கடைகள் 2022ல் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடலாடி தேவர் சிலையில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வழியாக மெயின் பஜார், காமராஜர் சிலை வரை உள்ள பகுதிகளில் சாலையோர கடைகளால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரங்களில் அதிகளவு போக்குவரத்திற்கு இடையூறாக கடைகளை விரிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் கடலாடி நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. டூவீலர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடலாடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளின் முன்பும் சாலையோர கட்டுமான ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் கடலாடி வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றனர்.