/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
/
ரோட்டில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
ரோட்டில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
ரோட்டில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
ADDED : ஜன 23, 2025 04:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் வாரச்சந்தை நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாபாரிகள், மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோடு அம்மா பூங்கா அருகே ஒவ்வொரு புதன்தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இந்த நாளில் ராமநாதபுரம் சுற்றுப்புற கிராம விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய குவிகின்றனர்.
இவ்வழியாக கேணிக்கரை, ஓம்சக்தி நகர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் வாரச்சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் மழைநீர் மட்டுமின்றி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கடந்த சில வாரங்களாக டி-பிளாக் ரோட்டில் கூரை அமைத்து வாரச்சந்தை நடக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேகமாக வாகனங்கள் வரும் போது கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
வாரந்தோறும் ரூ.பல ஆயிரம் வாடகை வசூல் செய்யும் பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் சந்தைக்கு ஒதுக்கிய இடத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றி அங்கு மண்கொட்டி பள்ளத்தை மேடாக்குவதற்கு வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.