UPDATED : அக் 16, 2026 09:21 PM
ADDED : அக் 16, 2026 09:17 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: மஞ்சூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
ஒன்று முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான புதிய பாடநுால் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த முகாமிற்கு முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார்.
அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ பாடநுால் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. துணை முதல்வர் பாக்கியம் நன்றி கூறினார்.
