/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்பு
/
தேசிய குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்பு
தேசிய குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்பு
தேசிய குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 11, 2025 04:51 AM
சாயல்குடி: சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சமுதாய கூட அரங்கில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு கடலாடி வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.
சாயல்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன்தலைமை வகித்தார். சமுதாய சுகாதார செவிலியர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் வில்வா சவுந்தரநாதன் வரவேற்றார்.
என்.டி.டி., எனப்படும் தேசிய குடற்புழு நீக்கம் என்பது ஒரு வயது முதல் 19 வயதுள்ள பள்ளி மாணவர்களுக்கு வயிற்றில் உருவாகும் லார்வா புழுக்கள் ரத்தத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டதாகும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.
இவற்றை தவிர்ப்பதற்காக 'அல்பெண்டாசோல்' எனப்படும் ஒரு மாத்திரையை உட்கொள்ள வேண்டும். அதே போல் 20 வயது முதல் 30 வரை உள்ள பெண்களுக்கு மட்டும் அல்பெண்டா சோல் என்னும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கலாம் என ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு சுந்தரம் நன்றி கூறினார். பகுதி சுகாதார செவிலியர் தவமணி, ஆய்வாளர் முரளீஸ்வரன், பார்த்தசாரதி, முத்து பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

