/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் பாதுகாப்பு பயன்பாடு முறைகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
பயிர் பாதுகாப்பு பயன்பாடு முறைகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பயிர் பாதுகாப்பு பயன்பாடு முறைகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பயிர் பாதுகாப்பு பயன்பாடு முறைகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 13, 2025 11:14 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை, மத்திய அரசு நிறுவனமான புதுடில்லி ஸ்ஹில் இந்தியா லிமிடெட், குயவன்குடி கே.வி.கே., சார்பில், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் இணை இயக்குநர் (பொ) பாஸ்கர மணியன் தலைமை வகித்தார்.
ஸ்ஹில் இந்தியா லிமிடெட் துணை பொது மேலாளர் முகமது இப்ராஹிம் வரவேற்றார். மார்க்கெட்டிங் இயக்குநர் ஷஷாங்க் சதுர்வேதி, துணை இயக்குநர்கள் அமர்லால், ராஜேந்திரன் பேசினர். டெக்னிகல் அட்வைசர் ராம்தேவ் உயிர் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் பயிர் பாதுகாப்பு முறைகள் சம்பந்தமான விளக்கப் படம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. மார்க்கெட்டிங் மேலாளர் ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார்.