/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 27, 2025 06:27 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அண்ணாபல்கலை பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் துறை மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் சார்பில் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
நிலையான நகர்ப்புறங்களில் வளர்ச்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. பல்வேறு தொழில் நுட்பக்கல்லுாரிகளில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் கழிவு மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு, நகர் புற வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் உதயக்குமார் பங்கேற்று நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் லாவண்யா, துணை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் செய்தனர்.

