ADDED : பிப் 08, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி தீயணைப்பு நிலையத்தில் நாளை (பிப்.,9) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தனியார் துறை பாதுகாப்பு காவலாளி களுக்கு இலவசமாக தீயணைப்பு அடிப்படை பயிற்சி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை எவ்வாறு அணைப்பது.
பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பை தனியார் பாதுகாப்பு காவலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர்.

