/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி
/
நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி
ADDED : மார் 05, 2024 04:34 AM

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலத்தில் 15 சிறிய கண்மாய் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் மகேந்திர பாண்டியன், விக்னேஷ், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்சோழந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியாளர் சாம்சன்நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தார். கண்மாயில் கருவேல மரங்கள் மற்றும் மீன் பாசிகுத்தகை வருமானத்தில் 50 சதவீதம் இந்த நிர்வாகிகள் வழியாக கிராமத்திற்கு பயன்படுத்தும் வகையில் சட்டம் உள்ளது.
மீன் பாசி ஏலம், கருவேல மர ஏலம் உள்ளிட்டவைகளில், அரசியல்கட்சியினர். அதிகாரிகளுக்கோ கண்மாயிலிருந்துபங்களிப்பு கொடுக்கத் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.
திருப்பாலைக்குடி, உப்பூர், பாரனுார், காவனுார் உள்ளிட்ட 15 சிறிய கண்மாய் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

