/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பு பணிக்காக நீச்சல் குளத்தில் பயிற்சி நிறுத்தம்
/
பராமரிப்பு பணிக்காக நீச்சல் குளத்தில் பயிற்சி நிறுத்தம்
பராமரிப்பு பணிக்காக நீச்சல் குளத்தில் பயிற்சி நிறுத்தம்
பராமரிப்பு பணிக்காக நீச்சல் குளத்தில் பயிற்சி நிறுத்தம்
ADDED : மார் 14, 2024 10:47 PM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இந்தவாரம் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் அருகே நீச்சல்குளம் உள்ளது. தினமும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள்பயிற்சிக்காக வருகின்றனர்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முறையாக நீச்சல் கற்றுக்கொள்ளும் வகையில் நீச்சல் குளத்தின்ஆழத்தை 16 அடியில் இருந்து 6 அடியாக குறைத்துள்ளனர். பராமரிப்பு பணி காரணமாக நீச்சல் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், நீச்சல் குளத்தில் குழந்தைகள், பெரியோர் பயிற்சி பெறும் வகையில் அமைத்துள்ளோம். சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் பணிகளை முடித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.