/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இடமாறுதல் கவுன்சிலிங் ஏமாற்றம் பள்ளி ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி
/
இடமாறுதல் கவுன்சிலிங் ஏமாற்றம் பள்ளி ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி
இடமாறுதல் கவுன்சிலிங் ஏமாற்றம் பள்ளி ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி
இடமாறுதல் கவுன்சிலிங் ஏமாற்றம் பள்ளி ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 05, 2025 02:27 AM

ராமநாதபுரம்:சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் வழங்க மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் ராமநாதபுரத்தில் கவுன்சிலிங் நடைபெறும் பள்ளி வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை (வணிகவியல்) ஆசிரியர் ஏ.சீனிவாசன் 53. இவர் முதுகலை ஆசிரியர் பொது மாறுதலில் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
நேற்று காலை கவுன்சிலிங் நடைபெறும் ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் சீனிவாசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை ராமநாதபுரம் நகர் போலீசார் மீட்டு விசாரித்தனர்.
சீனிவாசன் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 11 ஆண்டுகளாக பணி புரிகிறேன். முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கில் சிலர் பொய்யான மருத்துவ சான்றிதழ் கொடுத்துள்ளதால் எனது சீனியாரிட்டி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனக்கு நியாயம் வழங்க வேண்டும். இடமாறுதலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறுகையில், ஆன்-லைன் பதிவு அடிப்படையில் அரசு விதிகளின் படி கவுன்சிலிங் நடக்கிறது. பரமக்குடி சீனிவாசனுக்கு முன்னுரிமை இருந்தாலும் அவருக்கு அடுத்தபடியாக உள்ளவர் உடல்நலக்குறைவுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இதனால் சீனிவாசனுக்கு முன்னுரிமை வழங்க முடியாது. அதே சமயம் பொய்யான மருத்துவச்சான்றிதழ் என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்படும் என்றார்.