/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் நடவடிக்கை எடுங்க ஆபீசர்

ADDED : டிச 25, 2024 03:42 AM

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டில் ஆபத்தான நிலையில் உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டோரத்தில் குளம் போல் தேங்கிய நீரில் கீழே சாயும் நிலையில் மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: இந்த ரோட்டின் வழியாக பள்ளி, கல்லுாரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. இதன் அஸ்திவாரம் பலமில்லாமல் உள்ளதால் இழுவைக் கம்பிகள் ஏதுமின்றி அந்தரத்தில் நிற்கின்றன.
எனவே ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலர்கள் உயரழுத்த மின் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மின்வாரியத்திலும் புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.