/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருவிளக்குகள் இல்லாமல் அவதி திருநங்கைகள் கலெக்டரிடம் புகார்
/
தெருவிளக்குகள் இல்லாமல் அவதி திருநங்கைகள் கலெக்டரிடம் புகார்
தெருவிளக்குகள் இல்லாமல் அவதி திருநங்கைகள் கலெக்டரிடம் புகார்
தெருவிளக்குகள் இல்லாமல் அவதி திருநங்கைகள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஜூலை 15, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கூட்டாம்புளியில் உள்ள திருநங்கை நகரில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் சிரமப்படுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
கூட்டாம்புளி திருநங்கை நகரை சேர்ந்த பவித்ரா உள்ளிட்ட திருநங்கைகள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில், எங்களது நகரில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் வெளியே நடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளது.
குறிப்பாக பாம்பு, பூரான், தேள் நடமாட்டம் உள்ளது. எனவே உடனடியாக திருநங்கை நகரில் தெருவிளக்குகள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.