ADDED : அக் 23, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அரசூரில் மாசாணியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே நேற்று முன்தினம் பெய்த மழையால் வேப்ப மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் சென்று மின் இணைப்பை துண்டித்து மரத்தை அகற்றி சரி செய்தனர். மரம் விழுந்ததால் அப்பகுதியில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

