ADDED : ஏப் 18, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:
பரமக்குடி அருகே திணைக்குளத்தில் நடந்த மரம் நடும் விழாவில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப்பணிக் குழு சார்பில் மரம் நடு விழா நடந்தது. அப்போது மரம் வளர்ப்பின் அவசியம் மற்றும் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாண்டி மகாராஜா மரக்கன்றுகளை நட்டனர். வனச்சரக அலுவலர் அன்பரசி வாழ்த்தி பேசினார்.
வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ், வக்கீல்கள் இளங்கோவன், பசுமலை, பிரபு, கண்ணன், கணேசன் லிங்கமூர்த்தி, திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

