/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
/
கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : பிப் 16, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் நம்ம ஊர் குழு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன் சார்பில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கோயில் வளாகத்தில் மாமரம், வாழை, புங்கன், அத்தி, மாதுளை, கொய்யா, சப்போட்டா போன்ற பழக்கன்றுகளும் தென்னை, நீர்மருது போன்ற மரக்கன்றுகளும் நுாறுக்கும் மேல் நடப்பட்டது.
திருப்புல்லாணி நம்ம ஊர் குழு ஒருங்கிணைப்பாளர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதிமரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சுகாதார ஆய்வாளர் ராஜபார்த்தசாரதி, வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.