ADDED : மார் 15, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் எம்.எஸ்.கே., நகராட்சி தொடக்கப்பள்ளியில் அவின்கோ ஏ. வி.கே.ராஜா அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் பாட்டில், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் சூசை மரங்களின் அவசியம், சுத்தமான தண்ணீர் குறித்தும் பேசினார். தலைமையாசிரியர் பொன்னுச்சாமி, ஆசிரியர்கள் வளர்மதி சங்கரி, வேல்விழி உட்பட பங்கேற்றனர்.
