UPDATED : அக் 31, 2026 05:58 PM
ADDED : அக் 31, 2026 05:55 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.
சங்கத் தலைவர் ஹாரிஸ் தலைமை வகித்தார். காங்., சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், சங்க நிர்வாகி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வக்கீல் இளமுருகன், விவசாயிகள் சங்க பிரதிநிதி மதுரைவீரன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
