____________________ பாம்பன் பாலத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்
____________________ பாம்பன் பாலத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்
UPDATED : அக் 31, 2026 06:39 PM
ADDED : அக் 31, 2026 06:36 PM

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பகலில் மின்விளக்கு எரிவதால் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு வருகின்றனர். பாலத்தின் இருபுறம் 200க்கு மேற்பட்ட மின் விளக்குகள் உள்ளது. பல மாதங்களாக மின்விளக்குகள் பராமரிப்பின்றி எரியாமல் கிடந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மின் விளக்குகளை 50 சதவீதம் மின் விளக்குகள் சரி செய்து இருளில் ஒளிர செய்தனர்.
ஆனால் இந்த மின்விளக்குகளை ராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் மீண்டும் கண்டுகொள்ளாமல் விட்டனர். இதனால் பாலத்தில் மின்விளக்குகளை நேற்று காலை சுவிட்ச் ஆப் செய்யாமல் மதியம் 1:00 மணி வரை எரிந்து கொண்டிருந்தது. இது பல நாட்களாக நீடிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன் மின்விளக்குகள் பழுதாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் மின் விளக்குகளை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
