தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/லாரிகள் மோதல்: டிரைவர் பலி

லாரிகள் மோதல்: டிரைவர் பலி

லாரிகள் மோதல்: டிரைவர் பலி


ADDED : மார் 11, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவிபட்டினம், - தேவிபட்டினம் அருகே இரண்டு சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை இடையர்பட்டியை சேர்ந்தவர் பொன்னுவேல் 54. இவர் திருச்சியில் இருந்து ராமநாதபுரத்திற்கு சரக்கு லாரியில் கூல்டிரிங்ஸ் ஏற்றிச் சென்றார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் சோதனைச்சாவடி அருகே சென்ற போது எதிரில் துாத்துக்குடியில் இருந்து காரைக்குடிக்கு உப்பு ஏற்றிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இரண்டு சரக்கு வாகனங்களும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கூல்டிரிங்ஸ் லாரி டிரைவர் பொன்னுவேல் பலத்த காயம் அடைந்தார். அவரை இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.

தேவிபட்டினம் போலீசார் லாரி டிரைவர் துாத்துக்குடி வாகைக்குடி பெருமாள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us