தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வலையில் சிக்கிய  ஆமை உயிருடன் விடப்பட்டது

வலையில் சிக்கிய  ஆமை உயிருடன் விடப்பட்டது

வலையில் சிக்கிய  ஆமை உயிருடன் விடப்பட்டது


ADDED : ஏப் 10, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.

தொண்டி அருகே பாசிபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விக்னேஸ்வரன், நம்புதாளை பழனிச்சாமி ஆகிய இருவரும் நேற்று அதிகாலை நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் வலையில் 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து தொண்டி மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர்.

அவர்களின் அறிவுரைப் படி ஆமையை மீண்டும் கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில் இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம்.

தற்போது வலையில் சிக்கிய ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது. ஆமையை விடுவிக்க கத்தியால் வலையை அறுத்ததால் வலை சேதமடைந்தது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us