/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய கராத்தே போட்டியில் இரட்டை சகோதரிகள் வெற்றி
/
தேசிய கராத்தே போட்டியில் இரட்டை சகோதரிகள் வெற்றி
ADDED : டிச 19, 2024 04:31 AM
ரெகுநாதபுரம்: அகில இந்திய போட்டி டிச.12 முதல் 15 வரை டில்லியில் உள்ள டால்கடோர உள்விளையாட்டு மைதானத்தில் நடந்தது. சப்-ஜூனியர் பிரிவில் 7 வயதிற்கு மேல் 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடந்தது.
பெண்களுக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் மொத்தி வலசை சசிக்குமார் மகள் ரிதன்யா முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்தார். ரித்யா 30 கிலோ எடை குமித்தே பிரிவில் பங்கேற்று இறுதிசுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற இரட்டைச் சகோதரிகள் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கின்றனர்.
மாணவிகளை மாநில கராத்தே சங்கச் செயலாளர் அல்தாப் ஆலம், பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், பள்ளி தாளாளர் கோகிலா, பள்ளி நிர்வாக அலுவலர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா மற்றும் பயிற்சியாளர் சசிக்குமார் பாராட்டினர்.

