/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது
/
சிறப்பு எஸ்.ஐ., யை மிரட்டிய இருவர் கைது
ADDED : ஆக 13, 2025 11:13 PM
சாயல்குடி:சாயல்குடி வி.வி.ஆர்., நகர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிய டூவீலர் விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சிறப்பு எஸ்.ஐ., வழி காத்தான் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது சாயல்குடியைச் சேர்ந்த இம்ரான் 30, மற்றும் முகமது இஸ்திரீஸ் 22, ஆகிய இரண்டு இளைஞர்கள் மது போதையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களை தொல்லை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து சிறப்பு எஸ்.ஐ., வழிகாத்தான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அப்போது இருவரும் அவரை அசிங்கமாக பேசினர். அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தது குறித்து சாயல்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் இரண்டு வாலிபர்களும் கைது செய்யப்பட்டு முதுகுளத்துார் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டனர்.