/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபம்
/
தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபம்
ADDED : ஜன 24, 2024 04:36 AM
சென்னை : பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நிரந்தர பந்தல் மற்றும் இரண்டு மண்டபம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்.30ல் அங்கு தேவர் ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அதிகளவில் குவிகின்றனர்.
குறுகிய வழியில் அதிக கூட்டம் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. பெண்களும், குழந்தைகளும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது.
எனவே, பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் தனித்தனியாக அஞ்சலி செலுத்துவதற்காக இரண்டு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக 1.45 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து தற்காலிக பந்தல் மற்றும் தடுப்புகளுக்கு மாற்றாக நிரந்தர பந்தல் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது. நடப்பாண்டு தேவர் ஜெயந்தி விழாவிற்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

