/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் வெடி வைத்து மீன் பிடித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை
/
கடலில் வெடி வைத்து மீன் பிடித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை
கடலில் வெடி வைத்து மீன் பிடித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை
கடலில் வெடி வைத்து மீன் பிடித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : மே 10, 2025 02:32 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம்மாவட்டம் தொண்டி பகுதி கடலில் வெடிவைத்து மீன் பிடித்த வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் 45. அண்ணாநகர் குருசாமி மகன் அசோக்குமார் 40.
இவர்கள் இருவரும் வட்டாணம் கடல் பகுதியில் டெட்டனேட்டர் மூலம் வெடி வெடித்து மீன் பிடித்தனர். இது தடை செய்யப்பட்ட முறை என்பதால் கியூ பிரிவு போலீசார் இருவரையும் பிடித்து தொண்டி போலீசாரிடம் 2017 மே 31 ல் ஒப்படைத்தார்.
தொண்டி இன்ஸ்பெக்டர் முகமத்நசீர் , வெடி மருந்து தடுப்பு சட்டத்தில் இருவரையும் கைது செய்தார். பின்னர் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த வெடி வைத்து மீன் பிடித்த இதில் கண்ணன், அசோக்குமாருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.--------