/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்
/
அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்
அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்
அனுமதியின்றி கத்தி, அரிவாள் விற்பனை தடுத்து நிறுத்தம்
ADDED : டிச 11, 2025 06:51 AM
தொண்டி: தொண்டி அருகே நம்பு தாளையில் அனுமதி இல்லாமல் அரிவாள், கத்தி விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொண்டி அருகே நம்பு தாளையில் வடமாநில தொழிலாளர்கள் முகாமிட்டு அரிவாள், கத்தி, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை ஓரம் பட்டறை அமைத்து இரும்பை காய்ச்சி, சம்மட்டியால் அடித்து கத்தி, அரிவாள், அரிவாள்மனை, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அனுமதி இல்லாமல் கத்தி, அரிவாள் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொண்டி போலீசார் சென்று அனுமதி இல்லாமல் கத்தி, அரிவாள் விற்பனை செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து வடமாநில தொழி லாளர்கள் இருப்பிடத்தை காலி செய்து சென்றனர்.