/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எரியாத உயர் கோபுர மின்விளக்கு
/
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எரியாத உயர் கோபுர மின்விளக்கு
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எரியாத உயர் கோபுர மின்விளக்கு
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எரியாத உயர் கோபுர மின்விளக்கு
ADDED : ஜன 11, 2024 05:00 AM

-ராமநாதபுரம், : ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட் ரூ.5 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியை பயன்படுத்திவருகின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாததால்பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கியுள்ளது.
இதனால் ரயில்நிலையம் செல்லும் பயணிகள், பஸ் ஸ்டாண்டிற்கு வரும்பயணிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டிற்கும், ரயில் நிலையத்திற்கும் வட மாநிலபயணிகள் ஏராளமானோர் வருகின்றனர்.
பாம்பன்பாலம் கட்டுமானப் பணிகள் நடப்பதால் பெரும்பாலான ரயில் பயணிகள் ராமநாதபுரத்தில் இறங்கி இங்கிருந்து பஸ்சில் ராமேஸ்வரம் செல்கின்றனர்.
ரயில் நிலையத்தின்முன்பகுதியிலும் விளக்குகள் எரியாமல் உள்ளது. பயணிகள் இருளில் நடப்பதற்கு அச்சம் கொள்கின்றனர். உடனடியாக இந்தஉயர் கோபுர மின் விளக்கை பழுது நீக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

