/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதாள சாக்கடை திட்டம் அம்போ... ராமேஸ்வரம் வீதியில் ஓடும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடை திட்டம் அம்போ... ராமேஸ்வரம் வீதியில் ஓடும் கழிவுநீர்
பாதாள சாக்கடை திட்டம் அம்போ... ராமேஸ்வரம் வீதியில் ஓடும் கழிவுநீர்
பாதாள சாக்கடை திட்டம் அம்போ... ராமேஸ்வரம் வீதியில் ஓடும் கழிவுநீர்
ADDED : ஜூலை 17, 2025 11:16 PM

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரத்தில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகி கழிவுநீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரத்தில் ரூ.52.60 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டத்தை ஜூன் 11ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.தரமற்ற பணிகளால் பல இடங்களில் சாலையில் அமைத்த கழிவுநீர் தொட்டி மூடிகள் உடைந்தும், தொட்டியில் இருந்து கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது.
நேற்று ராமேஸ்வரத்தில் காளவாய் தெரு ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் இங்குள்ள தனியார் தங்கும் விடுதி மற்றும் வீடுகளில் வசிப்போருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் மக்களுக்கு பயன்பாடின்றி கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடி இலவசமாக நோயை பரிசாக கொடுப்பது தான் அரசின் சாதனையாக உள்ளது. அவசரக்கதியில் அமைத்த இத்திட்டத்தால் 10 சதவீதம் கூட பயனில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர்.