/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்
/
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்
ADDED : ஏப் 04, 2025 06:35 AM
ராமநாதபுரம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் எவ்வித பணி வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், பட்டதாரிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித் தொகையாக 3 ஆண்டுகளுக்குவங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவித் தொகைகல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும்.https://tnvelaivaaippu.gov.in/Empowerஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு அனைத்து சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

