ADDED : மார் 05, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : -கீழக்கரை அருகே மாவிலாதோப்பு நாடார் மகாஜன சங்கத்தின் புதிய உறுப்பினர் இணைவு விழாவை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம் வரவேற்றார்.
மாவிலாத்தோப்பு கிராம தலைவர் ஐயம்பெருமாள், பள்ளி தாளாளர் குமரவேல் பங்கேற்றனர்.

