/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அள்ளப்படாமல் நிரம்பும் குப்பைதொட்டிகளால் சுகாதாரக்கேடு
/
அள்ளப்படாமல் நிரம்பும் குப்பைதொட்டிகளால் சுகாதாரக்கேடு
அள்ளப்படாமல் நிரம்பும் குப்பைதொட்டிகளால் சுகாதாரக்கேடு
அள்ளப்படாமல் நிரம்பும் குப்பைதொட்டிகளால் சுகாதாரக்கேடு
ADDED : ஏப் 12, 2024 04:22 AM

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே அள்ளப்படாமல் குப்பை தொட்டி நிரம்பியுள்ளதால் சுகாதாரக்கேட்டால் மக்கள்பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டுவதற்காக குப்பை தொட்டி வைத்துள்ளனர்.
இத்தொட்டியில் குப்பை ஓரிரு நாட்களில் நிரம்பி வழிகிறது. உடனுக்குடன் அகற்றப்படாமல் பாலிதீன் பைகள், பேப்பர்கள் காற்றில் பறந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே தொட்டிகளில் குப்பையை அகற்ற பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.